உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வேகம் எடுக்காத கார் விற்பனை

வேகம் எடுக்காத கார் விற்பனை

புதுடில்லி;ஆகஸ்ட் மாத பயணியர் கார் விற்பனை, 1.06 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 3.47 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், இந்த ஆகஸ்டில், 3.43 லட்சம் கார்களே விற்பனை ஆகியுள்ளன.முன்னணி கார் நிறுவனங்களான, 'மாருதி, ஹூண்டாய், டாடா' ஆகியவற்றின் விற்பனையும் சரிந்துள்ளது.மாருதியின் குறைந்த விலை கார்களின் விற்பனை, 18.85 சதவீதம் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, 'டொயோட்டா' நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, 34.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. 'ஹோண்டா' கார்களின் விற்பனை, 32.42 சதவீதம் குறைந்துள்ளது.தொடர்ந்து மூன்று மாதங்களாக, பயணியர் கார் விற்பனையில், முன்னேற்றம் காணப்படவில்லை. வர இருக்கும் பண்டிகை நாட்களில் கார் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனம் ஆகஸ்ட் 2023 -ஆகஸ்ட் 2024 வளர்ச்சி (%)

மாருதி 1,56,114 1,43,075 8.36 (குறைவு)ஹூண்டாய் 53,830 49,525 8 (குறைவு)டாடா 45,933 44,486 3.16 (குறைவு)மஹிந்திரா 37,270 43,277 16.12 கியா 19,219 22,523 17.19டொயோட்டா 22,910 30,879 34.80ஹோண்டா 7,880 5326 32.42 (குறைவு)எம்.ஜி., 4,185 4,571 9.22மொத்தம் 3,47,341 3,43,662 1.06 (குறைவு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை