செமிகண்டக்டர் ஜெர்மனியுடன் ஒப்பந்தம்
புதுடில்லி:ஜெர்மனியைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான 'இன்பினியன்' இந்தியாவில் பவர் சிப்களை உற்பத்தி செய்வதற்கான சிலிகான் வேபரை வழங்க, 'சி.டி.ஐ.எல்.,' உடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, இன்பினியன், சி.டி.ஐ.எல்.,க்கு வெற்று செமிகண்டக்டர் வேபர்களை வழங்கும்.இதை, இந்திய நிறுவனமான சி.டி.ஐ.எல்., பவர் இன்வெர்ட்டர், சோலார் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் துறைக்கான மின் தீர்வுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு போன்ற தயாரிப்புகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப பவர் சிப்செட்டை உருவாக்கி, அசெம்பிளி மற்றும் பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தும்.இவ்வாறு தயாரிக்கப்படும் பவர் சிப்களை, முதலில் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய பின், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.'கான்டினென்டல் டிவைஸ் இந்தியா' எனப்படும் சி.டி.ஐ.எல்., நிறுவனம், கடந்த 1964ல் நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தியாளரான இது, தனித்துவமான செமிகண்டக்டர் மற்றும் சிலிகான் கார்பைடு சாதனங்களில் நிபுணத்துவம் பெற்றது.