ஸ்டார்ட் அப் திருவிழா: பதிவு செய்ய அழைப்பு
சென்னை:தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் சார்பில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனம் துவக்குவதை ஊக்குவிக்க, மதுரையில் வரும், 28, 29ல் ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது.இதில், புத்தொழில் துவங்க ஆலோசனை, முதலீடு தேவைப்படும் புத்தொழில் நிறுவனம் மற்றும் முதலீட்டாளரை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.எனவே, 'ஸ்டார்ட் அப் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தொழில்முனைவோர்கள் விரைவாக ஸ்டார்ட் அப் டி.என்., தளத்தில் பதிவு செய்யவும்' என, ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தெரிவித்துள்ளார்.