பங்கு சந்தை நிலவரம்
தணியாத தள்ளாட்டம் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்றும், மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு செய்தன. சென்செக்ஸ் 72,989 புள்ளிகளிலும்; நிப்டி 36 புள்ளிகள் சரிந்து 22,082 என்ற அளவிலும் முடிந்தன.இந்திய சந்தைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறும் அன்னிய நிதி முதலீடுகள் மற்றும் அமெரிக்க கூடுதல் வரிவிதிப்பு அச்சம் நீடிப்பது ஆகியவை, சந்தைகள் வீழ்ச்சிக்கு காரணமாகின. சென்செக்ஸ் குறியீட்டின் 30 பங்குகளில் 18 சரிவிலும், 12 உயர்விலும் நிறைவடைந்தன. வர்த்தகத்தின் இடையே 452 புள்ளிகள் வீழ்ச்சி கண்டபோதிலும், பிற்பகலில் பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டதால், சந்தைகள் ஓரளவு மீண்டு, குறைந்த புள்ளிகளில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. பஜாஜ் பின்சர்வ், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், மாருதி சுசூகி, டைட்டன், எச்.யு.எல்., ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் விலை குறைந்தன.எஸ்.பி.ஐ., சொமாட்டோ, டி.சி.எஸ்., அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி., பேங்க் ஆகிய பங்குகள் விலை உயர்ந்தன.அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 3,406 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.37 சதவீதம் குறைந்து, 70.64 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா உயர்ந்து, 87.19 ரூபாயாக இருந்தது.