உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிறுசேரியில் புதிய வளாகம் டி.சி.எஸ்., நிறுவனம் கட்டுகிறது 33 லட்சம் சதுர அடியில் அமைகிறது

சிறுசேரியில் புதிய வளாகம் டி.சி.எஸ்., நிறுவனம் கட்டுகிறது 33 லட்சம் சதுர அடியில் அமைகிறது

சென்னை:சிறுசேரி 'சிப்காட்' வளாகத்தில் 33 லட்சம் சதுர அடி பரப்பளவில், புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தை கட்டும் பணிகளை, டி.சி.எஸ்., நிறுவனம் துவக்கி உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதியில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ளது.இதற்காக, பழைய மாமல்லபுரம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, கிண்டி - பூந்தமல்லி சாலை ஆகிய வழித்தடங்களில், தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் புதிதாக கட்டப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது, பிற கட்டுமான நிறுவனங்களும், இதற்கான வளாகங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் டி.சி.எஸ்., நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் செயல்படுகின்றன. வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் அடிப்படையில், இந்நிறுவனம் சார்பில் பல்வேறு புதிய வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.இதில், சிறுசேரி 'சிப்காட்' வளாகத்தில், பட்டாம்பூச்சி உடல் வடிவில், 71 ஏக்கர் பரப்பளவில், மிகப்பெரிய வளாகம் உள்ளது. இதன் அருகில் கூடுதலாக காலி மனை, டி.சி.எஸ்., நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த இடத்தில், மூன்று கட்டடங்களாக புதிய வளாகம் கட்ட, டி.சி.எஸ்., நிறுவனம் முடிவு செய்தது. இதன்படி, 33 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தகவல் தொழில்நுட்ப வளாகம் கட்டும் பணிகளை, டி.சி.எஸ்., நிறுவனம் துவக்கி உள்ளது.வாகன நிறுத்தத்துக்காக, நான்கு தளங்கள் பயன்படுத்த இதில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த கட்டடங்கள் 11 மாடிகள் உடையதாக அமையும் என்றும், ஒரே சமயத்தில், 25,000 பேர் பணிபுரிய இடவசதி ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை