உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நுகர்வோர் உதவி மையத்தில் 5.41 லட்சம் புகார்

நுகர்வோர் உதவி மையத்தில் 5.41 லட்சம் புகார்

புதுடில்லி:தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு, கடந்த நிதியாண்டில் மட்டும் 5.41 லட்சம் புகார்கள் வந்திருந்ததாகவும்; இதில் 23 சதவீத புகார்கள் தென் மாநிலங்களில் இருந்து வந்தவை என்றும், நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலர் நிதி கரே தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு 2025ம் நிதியாண்டில் 5.41 லட்சம் புகார்கள் வந்திருந்தன. இவற்றில் 23 சதவீதம் தென் மாநிலங்களில் இருந்து வந்தவை. இது, நுகர்வோர் தளத்தின் வலுவான பிராந்திய ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது. தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட 28.54 லட்சம் வழக்குகளில், 5.62 லட்சம் வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இதில், தென்மாநில வழக்குகள் வெறும் 13.34 சதவீதம் மட்டுமே. தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆணையங்களில் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக, கர்நாடகா மற்றும் கேரள ஆணையங்கள், தாக்கல் செய்யப் பட்டதை விட அதிகமான வழக்குகளை தீர்த்து வைத்துள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !