7,500 டன் கார்பன் வாயு அகற்றம்
சென்னை:'ப்ளூ எனர்ஜி மோட்டார்ஸ்' நிறுவனம், இந்தியாவின் முதல் எல்.என்.ஜி., லாரியை, 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.இதன் வாயிலாக, கடந்த மூன்று ஆண்டுகளில், சுற்றுச்சூழல் மாசுபடாமல் 7,500 டன் கார்பன் டை ஆக்சைடு வாயுவை அகற்றி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது, ஆண்டுக்கு மூன்று லட்சம் மரங்கள் நடுவதற்கு சமமாகும். இந்த எல்.என்.ஜி., லாரிகளின் வாயிலாக, வர்த்தக வாகன துறையில், 30 சதவீதம் கார்பன் டை ஆக்சைடும்; 100 சதவீதம் சல்பர் ஆக்சைடும்; 98 சதவீதம் அபாயகரமான வாயுக்களும்; 59 சதவீதம் நைட்ரஸ் ஆக்சைடும்; 30 சதவீதம் இரைச்சலும் குறைகிறது.