உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வைக்கோலில் இருந்து மின் உற்பத்தி செய்யும் நிறுவனம்

வைக்கோலில் இருந்து மின் உற்பத்தி செய்யும் நிறுவனம்

புதுடில்லி: ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான எஸ்.ஏ.இ.எல்., இண்டஸ்ட்ரீஸ், மின்சார உற்பத்திக்காக 20 லட்சன் டன் நெல் கழிவுகளை கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. நெல் உமி, வைக்கோல் மற்றும் பிற தாவர பாகங்கள் கழிவு எனப்படுகிறது. இந்நிறுவனம், கழிவுகளில் இருந்து எரிசக்தி உற்பத்தி செய்வதற்காக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மொத்தம் 165 மெகாவாட் திறன் கொண்ட 11 ஆலைகளை அமைத்துள்ளது. நடப்பாண்டுக்கான விதைப்பு பருவம் துவங்கியுள்ள நிலையில், 20 லட்சம் டன் நெல் கழிவுகளை கொள்முதல் செய்து, எரிபொருள் அக்ரிகேட்டர் வாயிலாக தூய்மை மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக விவசாயிகளுக்கு வருமாய் ஈட்ட புதிய வழி உருவாக்கி தருவதோடு, கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றும் எஸ்.ஏ.இ.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை