உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஆந்திராவில் முதலீடு கைகொடுக்கும் அதானி, அம்பானி

 ஆந்திராவில் முதலீடு கைகொடுக்கும் அதானி, அம்பானி

விசாகப்பட்டினம்: கூகுளை தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆந்திராவில் 1 ஜிகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த தரவு மையத்தில், 6 ஜிகாவாட் சோலார் மின் திட்டங்கள் வாயிலாக, நவீன ஏ.ஐ., பிராசசர்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, ஆந்திர அரசுடன் ரிலையன்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இதற்கிடையே, ஆந்திராவில் அடுத்த 10 ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக, அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மேலாண் இயக்குநர் கரண் அதானி தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வுகள் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை