உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துாத்துக்குடி நிலக்கரி முனையம் அதானி விண்ணப்பம் நிராகரிப்பு

துாத்துக்குடி நிலக்கரி முனையம் அதானி விண்ணப்பம் நிராகரிப்பு

மும்பை:துாத்துக்குடி நிலக்கரி முனையம் தொடர்பான வழக்கில், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கோரிக்கையை, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் மும்பை அமர்வு நிராகரித்துள்ளது.துாத்துக்குடி நிலக்கரி முனையமானது, தனியார் - அரசு பங்களிப்பில் 2017 ஜூனில் துவங்கப்பட்டது; 2018ல் மூடப்பட்டதால், 52.17 சதவீத வருமான பகிர்வை எட்ட முடியாமல், கடந்த 2019ல், 355.19 கோடி ரூபாய் கடன் சுமையால் திண்டாடியது. இதனால், கடந்த 2020ல் திவால் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்நிறுவனத்தின் கடன் தொகை 479 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இந்நிலையில், துாத்துக்குடி நிலக்கரி முனையத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த அதானி போர்ட்ஸ், மாற்று திட்டத்தை சமர்ப்பிக்க அனுமதி கேட்டு கெடு தேதியைத் தாண்டி, தாமதமாக விண்ணப்பித்து இருந்தது.இதனால், விணணப்பத்தை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் நிராகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி