உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கூடுதல் கன்டெய்னர் முனையம் சென்னை துறைமுகம் திட்டம் கன்டெய்னர்கள் எண்ணிக்கை 20சதவிகிதம் உயர்வு

கூடுதல் கன்டெய்னர் முனையம் சென்னை துறைமுகம் திட்டம் கன்டெய்னர்கள் எண்ணிக்கை 20சதவிகிதம் உயர்வு

சென்னை:சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதால், கூடுதல் கன்டெய்னர் முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை துறைமுகத்தை நவீனமாக்கி, ஏற்றுமதி மற்றும் இறக்கு மதியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக, துறைமுகத்தின் கட்டமைப்பு மேம்பாட்டு பணி, கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, ரயில் மற்றும் சாலை போக்குவரத்துடனான இணைப்பு உள்ளிட்ட பணிகளை, படிப்படி யாக மேற்கொண்டு வருகிறோம்.கடந்த சில ஆண்டுகளாக, 10 முதல் 15 சதவீதம் என அதிகரித்து வந்த கன்டெய்னர்கள் எண்ணிக்கை, தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் முனையம் அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை