மேலும் செய்திகள்
ஐ.பி.ஓ.,
02-Nov-2025
சென்னை: சென்னையைச் சேர்ந்த விண்வெளி துறை 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'அக்னிகுல் காஸ்மோஸ்' 150 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளது. அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம், 'அக்னிபான்' ராக் கெட்டை, கடந்த ஆண்டு சோதனை ரீதியாக ஏவி வெற்றிபெற்றது. இதுவே, நாட்டில், '3டி பிரின்ட்டட்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட முதல் ராக்கெட். இந்த முறையில் ராக்கெட்டை விரைவாக வடிவமைத்து, ஒருங்கிணைக்க முடியும். இந்நிறுவனம், எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவி வட்ட பாதையில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது, அக்னிகுல் நிறுவனம், 150 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளது. இந்த நிதியானது, அட்வென்சா குளோபல், அதர்வா கிரீன் எகோடெக் எல்.எல்.பி., எச்.டி.எப்.சி., வங்கி, அர்த்த செலக்ட் பண்ட், பிரதிதி வென்ச்சர்ஸ், 100 எக்ஸ் ஆகியவற்றிடம் இருந்து திரட்டியுள்ளது. இந்த நிதியை ராக்கெட் தயாரிப்புக்கு பயன்படுத்த உள்ளது.
02-Nov-2025