1 லட்சம் பேருக்கு ஏ.ஐ., பயிற்சி
புதுடில்லி; வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இந்தியர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு தரவு கிளவுட் நிறுவனமான 'ஸ்னோபிளேக்' உடன் 'நாஸ்காம்' மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் திறன் பயிற்சியகமான 'பியூச்சர்ஸ்கில்ஸ் பிரைம்' இணைந்து, இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பியூச்சர் பிரைம் தளத்தின் வாயிலாக வழங்கப்பட உள்ள இந்த பயிற்சிகளில், 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களும், வேலை பார்த்து வரும் இளைஞர்களும் பயிற்சி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.