உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏர் இந்தியாவில் திறமையான மேலாளர்கள் இல்லை

ஏர் இந்தியாவில் திறமையான மேலாளர்கள் இல்லை

நான் ஏர் இந்தியா விமானங் களில் அடிக்கடி பயணம் மேற்கொள்கிறேன். அதன் நிர்வாகம் அரசிடமிருந்து தனியாருக்கு மாறிய பிறகும், பயண சூழலில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏர் இந்தியாவில் திறமையான மேலாளர்கள் இல்லை. அவ்வாறு இருந்தால், விமான பயணத்தின் பல்வேறு அம்சங்களில் மாற்றம் கொண்டு வந்து இருக்கலாம். - ப. சிதம்பரம்முன்னாள் மத்திய நிதி அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ellar
நவ 17, 2024 07:23

பாவம் இவரது மகனார் திரு கார்த்தி அவர்கள் டிஜிட்டல் பணி பரிவர்த்தனை இந்தியாவுக்கு ஒத்து வராது என்று கூறிய காலத்திலிருந்து திரு சிதம்பரம் அவர்களுடைய ஒவ்வொரு கருத்துமே பெரும் மனக்குழப்பத்தை காட்டுகிறது. ஏர் இந்தியா அரசாங்க நிறுவனமாக இருந்த பொழுது நான் லண்டனில் இருந்து மும்பை வரை 350 பேர் பயணம் செய்யக்கூடிய 747 வகை விமானத்தில் ஆறு அல்லது ஏழு பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு வந்ததில் பயணம் செய்தேன் .....அது திறமையான மேலாளர் உடைய நிர்வாகம் என்றால் அந்த நிறுவனம் இப்பொழுது அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே சென்றது சரிதானே? டாட்டா நிர்வாகத்தில் திறமையான மேலாளர்கள் இல்லை என்றால் எவ்வாறு அவ்வளவு பெரிய நிறுவனம் இயங்குகிறது ? அவ்வளவு பேருக்கு எவ்வாறு வேலை கொடுக்கிறது? ஏன் அங்கே இருப்பவர்கள் அந்த நிர்வாகத்தை பற்றி எந்த குறைகளையும் கூறுவதில்லை? இவர் என்ன பேசுகிறார் என்பது மாபெரும் குழப்பமாக இருக்கிறது


Sivagiri
நவ 07, 2024 14:02

ஐயா , மேலே பாத்துட்டிருக்காரு, கொஞ்சம் கீழ சைட்ல பாக்கணும், தமிழ்நாட்ல அரசு போக்குவரத்துக்கு துறையும், அதன் பேருந்துகளும் , இருக்கும் லட்சணம் கொஞ்சம் கவனிக்கோணும்-யா


karthik
நவ 07, 2024 09:33

உங்க கட்சிதானே டாட்டாவிடம் நன்றாக இருந்ததை புடுங்கி குரங்கு கையில் பூமாலையாய் அதை மாற்றி சர்வ நாசம் செய்து சுமார் 60 ஆயிரம் கோடி மக்கள் பணம் நஷ்டம் ஏற்படுத்தி ... அதே ஊழியர்களுடன் அதை மீண்டும் யாரும் வாங்க விருப்பம் இல்லாமல் போக.. வேறு வழி இல்லாமல் டாடா நிறுவனமே அந்த திறமை இல்லாத ஊழியர்களையும் சேர்த்து வாங்கிக்கொண்டது. நாட்டின் அனைத்து கெடுதலிலும் காங்கிரஸ் கட்சியின் கை இருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை