ஏசியன் பெயின்ட் ஆதிக்கம்: சி.சி.ஐ., விசாரணை
புதுடில்லி:ஏசியன் பெயின்ட் நிறுவனம் மீது ஆதித்ய பிர்லா குழுமத்தின் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், இந்திய போட்டி ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அலங்கார, சிறப்பு பெயின்ட் வணிகத்தில் மற்ற நிறுவனங்கள் நுழைவதையும் வளர்வதையும் தடுப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, நிர்வாக இயக்குநர் விசாரணை நடத்தி, 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் 2 சதவீத சரிவுடன் துவங்கிய ஏசியன் பெயின்ட் பங்கு, முடிவில் 2 சதவீதம் உயர்ந்தது.