உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இண்டஸ்இண்ட் மாஜி சி.இ.ஓ.,வுக்கு தடை

இண்டஸ்இண்ட் மாஜி சி.இ.ஓ.,வுக்கு தடை

புதுடில்லி : பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சுமந்த் காத்பாலியா மற்றும் நான்கு பேருக்கு சந்தை கட்டுப்பாட்டாளரான செபி தடை விதித்துள்ளது.இண்டஸ் இண்ட் வங்கியின் டெரிவேட்டிவ் கணக்கில் 1,572 கோடி ரூபாய் அளவுக்கு பிழை இருப்பதை, வங்கியின் உள்தணிக்கை குழு விசாரணையில் கண்டறிந்தது. இதையடுத்து, அவ்வங்கியின் பங்கு விலை கடுமையாக சரிந்தது. கணக்கு மோசடியால் ஏற்பட்ட இழப்பு 3,400 கோடி ரூபாயாக இருக்குமென கூறப்படுகிறது.இந்த விவகாரத்தில், இண்டஸ்இண்ட் வங்கியின் உயரதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக செபி தலைவர் துகின் காந்த பாண்டே தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்று இடைக்கால உத்தரவாக முன்னாள் சி.இ.ஓ., சுமந்த காத்பாலியா, முன்னாள் நிர்வாகிகளான அருண் குர்ரானா, சுஷாந்த் சவுரவ், ரோகன் ஜாதன்னா, அனில் மார்கோ ராவ் ஆகியோர பங்கு சந்தையில் பங்குகளை விற்கவோ, வாங்கவோ தடை விதித்து செபி உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை