உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னையில் ரூ.1,100 கோடிக்கு நிலம் வாங்கும் பாஷ்யம்

சென்னையில் ரூ.1,100 கோடிக்கு நிலம் வாங்கும் பாஷ்யம்

சென்னை:ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குழுமத்துக்கு சொந்தமான, சென்னை ஹாடோஸ் சாலையில் உள்ள நிலத்தை வாங்கும் போட்டியில், கட்டுமான நிறுவனமான பாஷ்யம் வென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையின் முக்கியமான பகுதியான ஹாடோஸ் சாலையில் உள்ள 5.78 ஏக்கர் நிலத்தை, சென்னையைச் சேர்ந்த பாஷ்யம் நிறுவனம் 1,100 கோடி ரூபாய்க்கு வாங்க இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த இடத்தை வாங்க, கடந்த சில மாதங்களாக நடந்த முயற்சியில், பாஷ்யம் குழுமமும் மற்றொரு கட்டுமான நிறுவனமான அரிஹந்த் பவுண்டேஷனும் போட்டியிட்டன.அரிஹந்த் பவுண்டேஷன் 1,000 கோடி ரூபாய்க்கு அந்த நிலத்தை வாங்க பேச்சு நடத்திய நிலையில், பாஷ்யம் குழுமம் இந்த ஒப்பந்தத்தை வென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ