உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அடுக்குமாடி தொழிற்கூடங்களில் ஐ.டி., நிறுவனம் துவக்க அழைப்பு

அடுக்குமாடி தொழிற்கூடங்களில் ஐ.டி., நிறுவனம் துவக்க அழைப்பு

சென்னை:சென்னை கிண்டி மற்றும் அம்பத்துாரில் உள்ள அடுக்குமாடி தொழிற்கூடங்களில் சிறு ஐ.டி., நிறுவனங்களை துவக்க, 'சிட்கோ' நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டையை, 'சிட்கோ' அமைக்கிறது. இந்நிறுவனம், கிண்டி, அம்பத்துார், மதுரை, ராணிப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி தொழிற்கூட வளாகங்களில், 25 முதல், 225 இருக்கை வசதிகளுடன் கூடிய அலுவலக இடத்தை சிறிய அளவில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளது. அதன்படி, தற்போது, கிண்டி மற்றும் அம்பத்துாரில், 'கோ வொர்க்கிங் ஸ்பேஸ்' எனப்படும் இணை பணியிட வசதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவை, தொழில் நடவடிக்கையுடன் கூடிய அலுவலக தேவைக்கு, 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கிண்டியில் ஆறு தளங்களுடன், 2.01 லட்சம் சதுர அடியிலும்; அம்பத்துாரில் நான்கு தளங்களுடன், 1.31 லட்சம் சதுர அடியிலும் அடுக்குமாடி தொழிற்கூட வளாகங்கள் உள்ளன. ஒரு சதுர அடி அம்பத்துார் ரூ. 10,080 கிண்டி ரூ. 8,520


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ