சாட்காம் சேவை விரைவில் துவங்கும்
சாட்காம் சேவை துவங்குவதற்கு இரண்டு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது. ஒன்று, ஒன்வெப், ஜியோ, ஸ்டார்லிங்க் உள்ளிட்ட சாட்காம் நிறுவனங்கள், இந்தியாவில் தரவுகள் இருப்பதை உறுதிசெய்து பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மற்றொன்று, அலைக்கற்றைக்கு விலை நிர்ணயம் செய்வது. இது தொடர்பாக டிராய் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் ஆலோசித்து வருகின்றன. இவை இறுதி செய்யப்பட்ட பின், சாட்காம் சேவை விரைவில் துவங்கும் என நம்பிக்கை உள்ளது.