தேங்காய் பொருட்கள் ரூ.4,349 கோடிக்கு ஏற்றுமதி
புதுடில்லி:கடந்த நிதியாண்டில், இந்தியாவிலிருந்து 4,349 கோடி ரூபாய் மதிப்பிலான தேங்காய் மற்றும் அதன் உப பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முந்தைய நிதியாண்டில் இவற்றின் ஏற்றுமதி 3,469 கோடி ரூபாயாக இருந்தது. அதிகபட்சமாக, தேங்காயின் சிரட்டையிலிருந்து தயாரிக்கப்படும் ஆக்டிவேட்டட் கார்பன் 2,799 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.