காண வரலாம் கண்காட்சி
கைவினை மற்றும் ஏற்றுமதி
நொய்டா
கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர், ஜவுளி, பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான ‘ஐ.எச்.ஜி.எப்., டெல்லி பேர் 2026’ கண்காட்சி, அக்.13 முதல் 17 வரை நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் அண்டு மார்ட் வளாகத்தில் நடைபெற உள்ளது. பங்கேற்கும் துறைகள்
கைவினை பொருட்கள் வீட்டு அலங்கார பொருட்கள் பர்னிச்சர் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் பரிசு பொருட்கள் அலங்கார மற்றும் வாழ்க்கை முறை பொருட்கள் பயன்கள்
இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், வெளிநாட்டு இறக்குமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்களை நேரடியாக சந்திக்க இந்த கண்காட்சி உதவும். 16 பிரிவுகளில் 2,000க்கும் மேற்பட்ட பொருள் வகைகள் இடம்பெற உள்ளன. புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் பெறவும், வெளிநாட்டு சந்தையின் தேவைகளை அறிந்து கொள்ளவும் இது வாய்ப்பாக இருக்கும். இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், நொய்டா, உ.பி., தேதி: அக்.13–17 இயந்திரங்கள் மற்றும் ஆட்டோமேஷன்
ஓசூர்.
இயந்திரங்கள், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், தொழிற்சாலை கருவிகள் மற்றும் நவீன உற்பத்தி தொழில்நுட்பங்களுக்கான ‘இண்ட்டெக் எக்ஸ்போ 2026’ கண்காட்சி, அக்.28 முதல் 31 வரை ஓசூரில் உள்ள ஹில்ஸ் எக்ஸிபிஷன் சென்டரில் நடைபெற உள்ளது. பங்கேற்கும் துறைகள்
தொழிற்சாலை இயந்திரங்கள் ஆட்டோமேஷன் உபகரணங்கள் ரோபோடிக்ஸ் இயந்திர கருவிகள் சரக்கு கையாளும் உபகரணங்கள் டிஜிட்டல் உற்பத்தி அமைப்புகள் பயன்கள்
பொறியியல் நிறுவனங்கள், வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் கொள்முதல் பொறுப்பாளர்கள் புதிய இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களை நேரடியாக அறிந்து கொள்ள இந்த கண்காட்சி உதவும். உற்பத்தி திறனை உயர்த்தும் புதிய தீர்வுகள், கருவிகள் மற்றும் சப்ளையர்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். இடம்: ஹில்ஸ் எக்ஸிபிஷன் சென்டர், பெங்களூரு–சென்னை நெடுஞ்சாலை, ஓசூர் தேதி: அக்.28–31