உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பொருட்கள் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் கவலை

பொருட்கள் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் கவலை

ஈரோடு:தமிழகத்தில், கட்டுமான பொருட்களின் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளதாக, சிவில் இன்ஜினியர்ஸ் ஆலோசனை கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. ஈரோடு சிவில் இன்ஜினியர்ஸ் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் சண்முகன் கூறியதாவது: கட்டுமான துறையில், அனைத்து பொருட்களின் விலையும், பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு யூனிட் மண், 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. போதுமான அளவு முறையாக அனுமதி வழங்கி, குவாரிகளை இயக்க வேண்டும். ஈரோடு பகுதியில் ஏற்கனவே இயங்கிய, 20 குவாரிகளில் தற்போது மூன்று மட்டுமே செயல்படுகிறது. மண், இரும்பு என்று மட்டுமில்லாமல், பிளம்பிங் பொருட்கள், ஒயர்கள் கூட, 250 ரூபாய்க்கு விற்ற நிலை மாறி, 750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் முன்பு, 25 வீடு கட்டிய நிலையில், தற்போது 3, 4 வீடு கட்டும் நிலைக்கு வந்துள்ளோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி