உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இறந்தவரின் வங்கி கணக்கு செட்டில்மென்ட் எளிதாகிறது

இறந்தவரின் வங்கி கணக்கு செட்டில்மென்ட் எளிதாகிறது

மும்பை:உயிரிழந்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு செட்டில்மென்ட் கிளெய்ம்கள் தொடர்பாக, ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது வங்கி டிபாசிட் கணக்கு, பாதுகாப்பு லாக்கர் மற்றும் அதில் உள்ள பொருட்களை, 15 நாட்களுக்குள் நாமினிகளுக்கு வங்கி வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், வட்டி அடிப்படையில் அபராதத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பேங்க் ரேட் அதாவது வங்கிகளுக்கு வழங்கும் நீண்ட கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதத்துடன், கூடுதலாக 4 சதவீத வட்டியை மொத்த செட்டில்மென்ட் தொகையில் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஆண்டு அடிப்படையில் இந்த வட்டி கணக்கிடப்படும். இந்த வழிகாட்டுதல்களை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக அனைத்து வங்கிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த வாடிக்கையாளர் விவகாரத்தில், தற்போது பல்வேறு வங்கிகளும் வெவ்வேறு நடைமுறையை பின்பற்றி வரும் நிலையில், இதை ஒருங்கிணைத்து எளிதாக்கும் விதமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !