உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / செயற்கை நுாலிழை ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்

செயற்கை நுாலிழை ஜி.எஸ்.டி., குறைக்க வலியுறுத்தல்

திருப்பூர்; ஆடை ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை கூடுதலாகக் கவர ஏதுவாக, செயற்கை நுாலிழை மீதான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பருத்தி பஞ்சு, நுால், ஜவுளி என, அனைத்து ரகங்களுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. செயற்கை நுாலிழைக்கு 12 சதவீதமும்; பஞ்சுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வளர்ச்சி பெறாமல் போக, இதுவும் ஒரு காரணம் என, ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர். ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்பது, இரண்டு அடுக்காக மாற வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச அடுக்கில் வரி விதிக்க, இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை