நேரடி விற்பனை: 17 நிறுவனத்துக்கு நோட்டீஸ்
புதுடில்லி:நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுவதாக எழுந்த புகாரை அடுத்து, ஓரிபேம் இந்தியா, விஹான் உட்பட 17 நேரடி விற்பனை நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:2021ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிகளுக்கு மாறாக, அதிக கமிஷன், வெளிநாட்டு பயணம் மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகள் என நேரடி விற்பனை நிறுவனங்கள் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக புகார்கள் எழுந்தன.ஆட்சேர்ப்பு அடிப்படையில் வருமானம், பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்தல், ரீபண்டு ஆகியவற்றில், நேரடி விற்பனை நிறுவனங்களின் நற்சான்றிதழை நுகர்வோர் சரிபார்த்து கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.