உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / காகித இறக்குமதி அதிகரிப்பால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கவலை

காகித இறக்குமதி அதிகரிப்பால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கவலை

புதுடில்லி,:நாட்டின் காகிதம் மற்றும் காகித அட்டை இறக்குமதி 20.50 லட்சம் டன்னை கடந்து இருப்பதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடும் சவாலை சந்தித்து வருவதாக, இந்திய காகித தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. அமைப்பின் அறிக்கை:மதிப்பின் அடிப்படையில், கடந்த நிதியாண்டில் காகிதம் மற்றும் காகித அட்டை இறக்குமதி 15,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.தொடர்ச்சியாக இறக்குமதி அதிகரித்து வருவது, மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ள உள்நாட்டு காகித தயாரிப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. உள்நாட்டு காகித துறையின் வளர்ச்சி குறைவதுடன், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான விரிவாக்க முதலீடுகளுக்கும் இது அச்சுறுத்தலாக மாறி உள்ளது. எனவே, காகித இறக்குமதிக்கான தரக் கட்டுப்பாடு விதிகளை அமல்படுத்துவதுடன், இறக்குமதிக்கு வரிச்சலுகைகள் அளிக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை மத்திய அரசு மறுசீராய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நாடு முழுதும் 900 காகித ஆலைகள் உள்ளன.தற்போது 550 ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.இறக்குமதி2020 - -21: 10.80 லட்சம் டன்2024 -- 25: 20.50 லட்சம் டன் சீனாவில் இருந்து: 27% ஆசியான் நாடுகளில் இருந்து: 20%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ