துளிகள்
கொச்சியில் சேமிப்பு கிடங்கு துவங்கியது டி.பி., வேர்ல்டு
து பாயை தலைமையிடமாக கொண்ட சரக்கு கையாளும் நிறுவனமான டி.பி., வேர்ல்டு, கொச்சியில் மொண்டலெஸ் இந்தியா நிறுவனத்துக்காக புதிய சேமிப்பு கிடங்கை துவங்கி உள்ளது. நுகர்வோர் மற்றும் சந்தை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கிடங்கில், 4,000க்கும் மேற்பட்ட சரக்குகளை அடுக்கும் இடங்கள் உள்ளன. இதில், 2,200 இடங்கள், உலர் பொருட்களை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், சாதாரண அறை வெப்பநிலையான 18 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலான பொருட்களை இங்கு சேமிக்க இயலும். பூஷன் ஸ்டீலை வாங்க
ஜே.எஸ்.டபிள்யு.,க்கு அனுமதி
பூ ஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தை, ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் நிறுவனம் வாங்கும் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. 19,700 கோடி ரூபாய்க்கு பூஷன் நிறுவனத்தை, ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் வாங்குவதற்கு எதிராக அதன் முந்தைய பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்கிய வங்கிகள் தொடர்ந்த வழக்கில், 'கடன் வழங்குநர்கள் குழு ஒப்புதல் அளித்த பின்னர், அதை மீண்டும் திறப்பது சட்ட விதிகளுக்கு முரணானது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இத்தாலி நிறுவனத்தை
கையகப்படுத்தும் டி.வி.எஸ்.,
இ த்தாலியைச் சேர்ந்த வாகன வடிவமைப்பு, பொறியியல் நிறுவனமான இன்ஜின்ஸ் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ., நிறுவனத்தை 50.50 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த இருப்பதாக டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மோட்டோ ஜிபி ரேஸிங்கில் அனுபவமிக்க இந்நிறுவனத்துடன் இணைந்து, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரீமியம், மின்சார வாகனங்களை உலக சந்தைக்கு கொண்டு வர இருப்பதாக டி.வி.எஸ்.,மோட்டார் நிறுவனத்தின் தலைவர் சுதர்சன் வேணு தெரிவித்துள்ளார்.