உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  துளிகள்

 துளிகள்

மதிப்புமிக்க ஐ.டி., நிறுவனங்களில் டி.சி.எஸ்., இன்போசிஸ் ஐ . டி., துறையில் உலக அளவில் இந்திய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் 'பிராண்டு பைனான்ஸ்' என்ற சர்வதேச நிறுவனம் 'ஐ.டி., சேவைகள் 25 -2026' என்ற தர வரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி, டி.சி.எஸ்., இன்போசிஸ் நிறுவனங்கள் உலகின் மிக மதிப்புள்ள ஐ.டி., சேவை பிராண்டுகளில் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. உலக தரவரிசையில் இந்தியாவும் அமெரிக்காவும் டாப் 25 பட்டியலில் தலா எட்டு நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அக்செஞ்சர் நிறுவனம், தொடர்ந்து 8வது ஆண்டாக உலகின் மிக மதிப்புள்ள ஐ.டி. சேவை பிராண்டாக உள்ளது. மேலும், ஹெச்.சி.எல்., டெக், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் டாப் 25 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சென்னையில் இசட்.எப்., குழுமத்தின் புதிய பிரிவு ஜெ ர்மனியை சேர்ந்த வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான இசட். எப்., குழுமம், சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் எலக்ட்ரிக் பார்க் பிரேக் உற்பத்திப்பிரிவைத் துவங்கியுள்ளது. ஒரகடத்தில் துவங்கப்பட்டுள்ள அப்பிரிவு, 80 லட்சம் பிரேக்குகள் தயாரிக்கும் திறனுள்ளது. உலகமெங்கும் இந்நிறுவனம், 25 கோடி எலெக்ட்ரிக் பார்க் பிரேக்குகளை வாகனங்களில் பொருத்தியுள்ளது. ஒரகடத்திலுள்ள ஆலை, அக்குழுமத்தின் 10வது தொழிற்சாலை ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி