உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின் வாகன விற்பனை 53% உயர்வு

மின் வாகன விற்பனை 53% உயர்வு

புதுடில்லி:'படா' என்ற வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஆகஸ்ட் மாத மின்சார வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த மாத மின்சார வாகன விற்பனை, 52.85 சதவீதம் உயர்ந்து, வலுவான நிலையில் நீடிக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1.95 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டில், 2.98 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து படா தலைவர் சாய் கிரிதர் கூறுகையில், ஆகஸ்ட் மாத மொத்த வாகன விற்பனையில், மின்சார வாகனங்களின் சந்தை பங்கு 9.50ல் இருந்து 12.30 சதவீதமாக உயர்ந்துள்ளது.''மொத்த வர்த்தக வாகன விற்பனையில், மின்சார வாகனங்களின் சந்தை பங்கு, 5.18 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் சார்ஜிங் கட்டமைப்பு, எரிபொருள் விலையை விட மின்சார விலை குறைவு. பி.எம்., இ - டிரைவ் திட்டம் மற்றும் மாநில அரசு கொள்கை உள்ளிட்டவை மின்சார வாகன விற்பனைக்கு ஆதரவாக உள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ