உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் ஜாப் ஒர்க் துறையின் எதிர்பார்ப்பு

 ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் ஜாப் ஒர்க் துறையின் எதிர்பார்ப்பு

திருப்பூர், 'மத்திய அரசின், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் மற்றும் கடன் நிவாரண திட்டங்களில், தங்களுக்கும் சலுகை வழங்கப்பட வேண்டும்'' என, ஜாப் ஒர்க் நிறுவனங் கள் எதிர்பார்க்கின் றன. திருப்பூரை சேர்ந்த 'ஜாப் ஒர்க்' நிறுவன பிரதிநிதிகள் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் இதுதொடர்பாக கோரிக்கை கடிதம் அளித்து வருகின்றனர். திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது: ''ஜாப் ஒர்க் நிறுவனங்கள், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து, அதிநவீன இயந்திரங்களை கொண்டு இயங்கி வருகின்றன. ''சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பின்பற்றுவதால், உற்பத்தி செலவும் மிக மிக அதிகரித்துள்ளது. அமெரிக்க வரி உயர்வு பிரச்னையால், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கும் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. ''எனவே, மத்திய அரசின், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் மற்றும் ஏற்றுமதி கடன் சார்ந்த நிவாரண திட்டங்களில், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களையும் இணைக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை