தமிழகத்தில் உர விற்பனை 40% சரிவு
சென்னை: எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், தமிழகத்தின் பல பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் யூரியா, டி.ஏ.பி., உள்ளிட்ட உரங்களின் விற்பனை 40 சதவீதம் சரிந்துள்ளது என, உர வினியோகஸ்தர்கள் நம்மிடம் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது: மேற்காசிய போரால், கடந்த ஏப்., மாதத்தில் உர வினியோகமும், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய அரசின் முயற்சியால் வினியோகம் சீரானது. பற்றாக்குறை வந்துவிட கூடாது என்ற அச்சத்தில் கூடு தலாக உரங்களை வாங்கி இருப்பு வைத்தனர். ஆனால், தென்மேற்கு பருவமழை குறைவு, காவிரியில் தண்ணீர் வராதது ஆகியவற்றால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. அதிக மழை பெய்யும் அக்., நவ., மாதங்களில் உர விற்பனை சீராகும் என எதிர்பார்த்தோம். வடகிழக்கு பருவமழை ஓரளவுக்கு பெய்தாலும், அது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஒவ்வொரு வினியோகஸ்தரிடமும் 10 – 20 சதவீதம் கூடுதலாகவே உர இருப்பு உள்ளது. இதனால் துறைமுகங்களில் 4 லட்சம் டன் உரம் வாங்க ஆளில்லாமல் காத்திருக்கிறது. உர நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்துள்ளன. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், உர விற்பனை 40 சதவீதம் சரிந்துள்ளது. வரும் நாட்களில் அதிக மழை பெய்தால் மட் டுமே உர விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு கூறினர். வாங்க ஆளில்லை வினியோகஸ்தர்களிடம் 10 – 20 சதவீதம் இருப்பு கூடுதலாக உள்ளது. துறைமுகங்களில் 4 லட்சம் டன் உரம் வாங்க ஆளில்லாமல் காத்திருக்கிறது. நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்துள்ளன.