உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் மீண்டும் கட்டணமா மத்திய நிதியமைச்சகம் மறுப்பு

யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் மீண்டும் கட்டணமா மத்திய நிதியமைச்சகம் மறுப்பு

புதுடில்லி:மத்திய அரசு அதிக மதிப்பிலான யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு, வணிகர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகிஉள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்த கட்டணம், கடந்த 2020 ஜனவரி மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிக மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக, வங்கிகளும், பேமென்ட் சேவை வழங்கும் நிறுவனங்களும் கவலை தெரிவித்துஉள்ளன. இதையடுத்து, மீண்டும் எம்.டி.ஆர்., கட்டணத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.வணிகரின் மொத்த வர்த்தகத்தை கணக்கில் கொள்ளாமல், தனித்தனி பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டு கட்டணம் வசூலிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும்; இதன்படி, 3,000 ரூபாய்க்கு அதிகமான யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப் படலாம் எனவும் கூறப்படுகிறது.

மறுப்பு

இதனிடையே, இவை அனைத்தும் தவறான, ஆதாரப்பூர்வமற்ற தகவல்கள் என, மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை