முதல் நீரிழிவு உயிரி வங்கி சென்னையில் அமைப்பு
சென்னை:ஐ.சி.எம்.ஆர்., மற்றும் எம்.டி.ஆர்.எப்., சார்பில், இந்தியாவின் முதல் நீரிழிவு உயிரி வங்கி சென்னையில் நிறுவப்பட்டுஉள்ளது. ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எம்.டி.ஆர்.எப்., எனப்படும் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து, இந்தியாவின் முதல் நீரிழிவு உயிரி வங்கியை சென்னையில் அமைத்துள்ளன. இவ்வங்கி, சென்னை எம்.டி.ஆர்.எப்., வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்கான காரணங்கள், இந்திய வகை நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்புடைய கோளாறுகள் பற்றிய மேம்பட்ட ஆராய்ச்சியை நோக்கமாக கொண்டு இவ்வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஐ.சி.எம்.ஆர்., அனுமதியுடன் அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் உயிர் மாதிரிகளை சேகரித்தல், பதப்படுத்துதல், சேமித்தல், வினியோகித்தல் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்கு இவ்வங்கி உதவும்.