உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  உணவு பதப்படுத்துதல் துறை வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 உணவு பதப்படுத்துதல் துறை வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சென்னை:உணவு பதப்படுத்துதல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும், தொழில்முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கவும், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, சென்னை கிண்டியில் நாளை, தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் நிறுவனம் நடத்த உள்ளது. மத்திய அரசின் சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இதில் பங்கேற்று, உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். அதன்படி, சிறுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதலை தெரிவிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை