வங்கிகளில் அன்னிய முதலீடு வரம்பு உயர்கிறது
புதுடில்லி:நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை அதிகரிக்க, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது முதலீட்டு உச்சவரம்பு, 20 சதவீதமாக உள்ளது. இதனை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. எனினும், பொதுத்துறை வங்கிகளின் 51 சதவீத பங்குகள், அரசின் வசம் தொடர்ந்து இருக்கும். அரசின் சீர்திருத்தத்தால், வங்கிகள் எளிதாக மூலதனத்தை திரட்டுவதுடன், பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் பங்களிப்பு வலுப்பெறும். இந்த தகவலால், நேற்று வர்த்தகத்தில் , பொதுத்துறை வங்கி குறியீடு 2 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. முடிவில், 0.25 சதவீதம் சரிவுடன் நிறைவடைந்தன.