உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.31,000 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.31,000 கோடி முதலீடு செய்த அன்னிய முதலீட்டாளர்கள்

புதுடில்லி:அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் இம்மாதத்தின் கடைசி 6 வர்த்தக அமர்வுகளில், இந்திய பங்குச்சந்தைகளில் கிட்டத்தட்ட 31,000 கோடி ரூபாயை முதலீடு செய்துஉள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வலுவான மதிப்பீடுகள், ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் மேக்ரோ பொருளாதார குறியீடுகள் உள்ளிட்ட காரணங்களினால், அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் இம்மாதத்தின் கடைசி 6 வர்த்தக அமர்வுகளில், அதாவது மார்ச் 21 முதல் 28ம் தேதி வரை, இந்திய பங்குச்சந்தைகளில் கிட்டத்தட்ட 30,927 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. இந்த சமீபத்திய முதலீடுகள் மார்ச் மாதத்துக்கான ஒட்டுமொத்த வெளியேற்றத்தை 3,973 கோடி ரூபாயாக குறைக்க உதவிஉள்ளது. முந்தைய மாதங்களான பிப்ரவரியில் 34,574 கோடி மற்றும் ஜனவரியில் 78,027 கோடி ரூபாயை பங்கு முதலீட்டில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை