சுந்தரம் கிளேட்டன் முன்னாள் இயக்குனர் லட்சுமணன் காலமானார்
சென்னை:டி.வி.எஸ்., குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குனர் எச்.லட்சுமணன், 92 வயது மூப்பின் காரணமாக காலமானார். டி.வி.எஸ்., குழுமத்தில், 20 வயதில் தட்டச்சராக பணியில் சேர்ந்த லட்சுமணன், பல்வேறு முக்கிய பொறுப்புகளையும், சுந்தரம் கிளேட்டன் ஆன, தற்போதைய டி.வி.எஸ்., ஹோல்டிங்ஸ்சின் முன்னாள் நிர்வாக இயக்குனராகவும், பொறுப்பு வகித்து உள்ளார். எச்.எல்., என அனைவராலும் அழைக்கப்பட்ட அவர், அந்நிறுவனம் மொபெட் தயாரிப்பில் துவங்கி, தற்போது உலக டூ - வீலர் சந்தையில் முக்கிய பங்கு வகிப்பதில் பெரும் பங்காற்றியவர். டி.வி.எஸ்., குழும நிறுவனர் டி.எஸ்.ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மகனும் நிறுவனத்தின் தற்போதைய கவுரவ தலைவருமான வேணு ஸ்ரீனிவாசனுடன் இணைந்து பணியாற்றியவர் எச்.லட்சுமணன். டி.வி.எஸ்., தொழில் சாம்ராஜ்யத்தின் சாணக்கியர் அவர் என்று பெருமையுடன் நினைவு கூர்வதாக வேணு ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.