நடப்பாண்டில் தங்கம் விலை 26 சதவிகிதம் உயர்வு
லண்டன்:நடப்பாண்டில், உலகளவில் தங்கம் விலை இதுவரை 26 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டிருப்பதாக, உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகளவில் தங்கம் விலை உயர்வுக்கு பணவீக்கம் அதிகரிப்பு, அமெரிக்க வரிவிதிப்பு பதற்றம் ஆகியவை குறிப்பிடத்தக்க காரணங்கள். இந்தியாவை பொறுத்தவரை, ரூபாய் மதிப்பு சரிந்ததுடன், தங்கத்தின் தேவை அதிகரிப்பால், தற்போது புதிய உச்சத்தில் நீடிக்கிறது. எனவே, தங்க நகைகள் வாங்குவது, தங்கத்தில் முதலீடு ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பலர் தள்ளி போட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.