உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் தொழிற்சாலைகளுக்கு சாதகம்

ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் தொழிற்சாலைகளுக்கு சாதகம்

ஓசூர்:ஜி.எஸ்.டி., குறைப்பால், தொழிற்சாலைகளின் பொருளாதார நிலை சாதகமாக அமைந்துள்ளதாக 'லகு உத்யோக் பாரதி' தேசிய துணைத்தலைவர் விஜயராகவன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகள் மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளன. தமிழகம், தொழில் துறையில் முன்னேறி வரும் மாநிலமாக விளங்குகிறது. தொழில்முனைவோருக்கு அனைத்து விதமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு, பிளக் அண்டு பிளே அடிப்படையில் தொழிற்சாலைகளை அமைத்து தர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், தொழிற்சாலைகள் இன்னும் சிறப்பாக முன்னேற வாய்ப்பாக அமையும். தற்போதைய ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தில் தொழிலாளர் கட்டணத்திற்கான வரி, 12 சதவீதத்திலிருந்து, 18 ஆக அதிகரித்திருப்பதை குறைக்க வேண்டும். இது தொடர்பாக ஜி.எஸ்.டி., கவுன்சில் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்பதால், மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ