உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஹையர் ரூ.1,000 கோடி முதலீடு

ஹையர் ரூ.1,000 கோடி முதலீடு

புதுடில்லி; வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், சீனாவைச் சேர்ந்த 'ஹையர்' நிறுவனம், இந்தியாவில் ஜே.எஸ்.டபிள்யு., குழுமத்துடன் இணைந்து, 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை ஹையர் நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட 'ஹையர் அப்ளையன்ஸ் இந்தியா' நிறுவனம், உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வணிகத்தை கொண்டுள்ளது இந்நிறுவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ