உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஹிட்டாச்சி ரூ.2,000 கோடி முதலீடு தமிழக அரசுடன் ஒப்பந்தம் 

ஹிட்டாச்சி ரூ.2,000 கோடி முதலீடு தமிழக அரசுடன் ஒப்பந்தம் 

சென்னை: ஹிட்டாச்சி குழுமம், 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு, தமிழக அரசுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துஉள்ளது. ஜப்பானை சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தை சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையம், சென்னை போரூரில் உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும், 3,000 வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான ஒப்பந்தம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் துறை அமைச்சர் ராஜா, பின்னர் வெளியிட்ட அறிக்கையில், 'ஹிட்டாச்சியின் சென்னை உலகளாவிய திறன் மையம் பெரிதாக மாற போகிறது. முதல்வர் ஸ்டாலினை, ஹிட்டாச்சி நிறுவனத்தினர் சந்தித்து, விரிவாக்கத்தை இறுதி செய்தனர். 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 3,000 வேலைவாய்ப்பை இது உருவாக்கும். 'இவை அனைத்தும் உயர் தொழில்நுட்ப வேலைகள். இது, தமிழகத்தில் மிகப்பெரிய திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை எடுத்து காட்டுகிறது' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை