உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஹூண்டாய் இந்தியா புதிய சி.இ.ஓ.,

ஹூண்டாய் இந்தியா புதிய சி.இ.ஓ.,

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தருண் கார்கை நியமிக்க, நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது தலைமை செயல்பாட்டு அலுவலராக பணியாற்றி வரும் தருண் கார்க், அடுத்தாண்டு ஜனவரி முதல் சி.இ.ஓ., வாக பதவியேற்பார். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய வணிகத்துக்கு இந்தியர் ஒருவர் தலைமை வகிக்க இருப்பது இதுவே முதல்முறை. தற்போது ஹூண்டாய் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள உன்சூகிம், தென் கொரியாவில் உள்ள தாய் நிறுவனத்தில் முக்கிய பணிக்காக திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை