உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தயாரிப்பு, சேவை துறை கூட்டு வளரச்சி அதிகரிப்பு

தயாரிப்பு, சேவை துறை கூட்டு வளரச்சி அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சி இம்மாதம் சற்றே அதிகரித்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 58.30 புள்ளிகளாக இருந்த 'எச்.எஸ்.பி.சி., பிளாஷ்' கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 58.60 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.தயாரிப்பு துறையில் தேவை அதிகரித்ததே ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. புதிய ஆர்டர்கள் மற்றும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு பணியமர்த்தல்கள் இம்மாதம் தான் விரைவாக அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ