உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  பசுமை எரிசக்தி துறையில் இந்தியா - ஓமன் கூட்டு

 பசுமை எரிசக்தி துறையில் இந்தியா - ஓமன் கூட்டு

புதுடில்லி: இந்தியா, ஓமன் வணிக நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பசுமை எரிசக்தி துறையில் தங்களது ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக ஓமன் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வணிக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளில் பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா, சூரிய மின்சக்தி பூங்காக்கள், மின்சேமிப்பு மற்றும் நவீன மின்வினியோக கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில், ஐந்து புதிய திட்டங்களை இணைந்து செயல்படுத்துவதை இலக்காகக் கொள்ள வேண்டும். வரும் 2027க்குள், இரு நாடுகளையும் சேர்ந்த 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைக்க, ஒரு புதிய தளம் உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் விவசாய தொழில்நுட்பத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த, இந்தியா - ஓமன் வேளாண் புத்தாக்க மையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். வர்த்தக ஒப்பந்தம் இந்தியா - ஓமன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்னிலையில், நேற்று கையெழுத்தானது. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்கு முன் இது செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, காலணி, வேளாண் பொருட்கள், பொறியியல் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்ட இந்தியாவின் 99.80 சதவீத பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை