உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / கூட்டு மின் பகிர்மானம் இந்தியா – சவுதி பேச்சு

கூட்டு மின் பகிர்மானம் இந்தியா – சவுதி பேச்சு

புதுடில்லி: இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையிலான மின் பகிர்மான இணைப்பு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றதாக எரிசக் தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், மத்திய துறை செயலர் பங்கஜ் அகர்வால் மற்றும் சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை இ ணையமைச்சர் நாசர் அல்-கஹ்தானி ஆகியோர் பங்கேற்று, இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஆலோசித்ததா க குறிப்பிடப்பட்டு ள்ளது. தற்போது உள்ள ஒப்பந்தத்தில், மின் தேவை அதிகரிக்கும் நெருக்கடியான காலங்களில் இரு நாடுகளுக்கு இடையில் மின்சாரத்தை பரிமாறி கொள்ளுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தி ட்டங்களை இணைந்து உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ