உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக வர்த்தக அமைப்பில் இந்தியா வலியுறுத்தல்

உலக வர்த்தக அமைப்பில் இந்தியா வலியுறுத்தல்

புதுடில்லி: ஆன்லைன் வர்த்தகத்தில் ஏகபோகத்தை தடுக்க, உலகளாவிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆலோசிக்குமாறு, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளிடம், இந்தியா வலியுறுத்தி உள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆன்லைன் வர்த்தகத்தில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏகபோகத்துடன் செயல்படுவதை தடுக்க, சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்பை ஊக்குவிக்க வேண்டும். மேலும், உலகளாவிய ஆன்லைன் வர்த்தகத்தில், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இடையே, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை அணுகுவதில் உள்ள இடைவெளி குறித்து விவாதிக்க வேண்டும். அனைவரும் அணுக கூடிய, பாதுகாப்பான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், நாடுகள் தொழில்நுட்பங்களைப் பரிமாறி கொள்ள உதவும் வகையில், ஒரு ஆன்லைன் தளத்தை உருவாக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை