உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  இறக்குமதி பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்க வலியுறுத்தல்

 இறக்குமதி பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்க வலியுறுத்தல்

புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன், இந்திய நிறுவனங்கள் அப்பொருட்களுக்கு செய்ய வேண்டிய தர கட்டுப்பாட்டு சோதனைக்கான கட்டணத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என, மத்திய அரசை சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான 'ஜி.டி.ஆர்.ஐ.,' வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தெரிவித்ததாவது: தர கட்டுப்பாட்டு உத்தரவின் நோக்கம் பொருட்களின் தரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்துவதாக இருந்தாலும், அதன் விரிவாக்கம் வேகமாக நடைபெறுவது சோதனை மையங்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, விதிமுறைகளை பின்பற்றுவதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிக்கல்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக, சோதனை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான அதிக கட்டணங்கள், சிறு இறக்குமதியாளர்களை சந்தையில் இருந்து வெளியேற்றும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகலாம். எனவே, அத்தகைய கட்டணங்களுக்கு அரசு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளது. Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை