ரூ.3.50 லட்சம் கோடி முதலீடு
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தக ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில், நடப்பாண்டின் முதல் அரையாண்டில், இந்திய பங்குகளில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 3.5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர். இதே காலத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் 1.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்று, முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர்.கடந்த 2022ல் இருந்து அதிகபட்சமாக இந்தாண்டில், அதிகளவில் பங்குகள் விற்று முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர். நிப்டி 50 குறியீடு 5.92 சதவீதமும், சென்செக்ஸ் 5.01 சதவீதமும் உயர்வு கண்டுள்ளன.