உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜியோ பே: ஆர்.பி.ஐ., அனுமதி

ஜியோ பே: ஆர்.பி.ஐ., அனுமதி

புதுடில்லி:ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த 'ஜியோ பைனான்சியல் சர்வீசஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஜியோ பேமென்ட் சொலுஷன்ஸ்', 'பேமென்ட் அக்ரகேட்டர்' என்ற வகையில், ஆன்லைன் பேமென்ட் சேவை அளிப்பதற்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றுள்ளது.இந்த ஒப்புதலால், மின்னணு பணப்பரிவர்த்தனை சேவையை, ஜியோ பேமென்ட் சொலுஷன்ஸ் நிறுவனம் வழங்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, மின்னணு பணப்பரிவர்த்தனை சேவையில் உள்ள 'பே பால், அமேசான் பே, போன் பே' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஜியோவின் ஜியோ பே, வருகை கடும் வர்த்தக போட்டியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.இந்நிறுவனம், மின்னணு முறையில், கைரேகைப் பதிவு வாயிலாக சேமிப்புக் கணக்கு சேவையை வழங்கி வருவதுடன், அந்த கணக்குக்கு டெபிட் கார்டும் வழங்குகிறது. அதோடு, மின்னணு பணப்பரிவர்த்தனை சேவையிலும் ஜியோ கால் பதிக்கவுள்ளது.

பேமென்ட் அக்ரகேட்டர்

வங்கி வாடிக்கையாளருக்கும், அவர்கள் பணம் செலுத்தும் வணிகம், தனிநபருக்கும் இடையே, மின்னணு பரிவர்த்தனை வசதியை வழங்கும் நிறுவனம், பேமென்ட் அக்ரகேட்டர். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, கார்டு இல்லாத தவணை, யு.பி.ஐ., வங்கி பணப்பரிமாற்றம், இ-வாலட், இ-மேன்டேட் என எந்த வகை மின்னணு பரிமாற்றத்தையும் நடத்தும் பணியில் இவை ஈடுபடுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை