31,000 கோடி ரூபாய் மதிப்பில் 6 மாதங்களில் கைமாறிய நிலங்கள்
புதுடில்லி: நடப்பாண்டின் முதல் அரையாண்டில், 31,000 கோடி ரூபாய் மதிப்புடைய 2,900 ஏக்கர் நில பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை விபரம்: கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை, கிட்டத்தட்ட 31,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,900 ஏக்கர் நிலங்களுக்கான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இவை, நில உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இடையே நேரடி விற்பனை மற்றும் கூட்டு மேம்பாட்டு பரிவர்த்தனையை உள்ளடக்கியவை.இந்த மதிப்பு, தற்போதைய சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்மையான விலையை அடிப்படையாக கொண்டவை அல்ல. இந்த நில பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை வீட்டு வசதி, வணிகம் மற்றும் கலப்பு பயன்பாட்டு திட்டங்களுக்குரியவை. https://x.com/dinamalarweb/status/1944603390501376209கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலங்களின் மொத்த மதிப்பு, கடந்தாண்டு முழுதும் செய்யப்பட்ட நிலப்பரிவர்த்தனைகளை காட்டிலும் 1.50 மடங்கு அதிகம். இவ்வாறு தெரிவித்துள்ளது.